
பீகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினரின் செயல்பாடுகள் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண நபரை மதுபானம் வைத்ததாக பொய் வழக்கில் சிக்க வைக்க, போலீசார் திட்டமிட்டு நடத்திய சூழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ரத்னாலி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர், ஜூன் 21-ஆம் தேதி இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரை அமர்க் சவுக்கிற்கு அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில், போலீசார் தங்களுடைய வாகனத்திலிருந்து ஒரு மதுப் பையை எடுத்து, சஞ்சீவ் குமார் பயணித்த பைக்கில் தொங்கவிட்டு வைக்கின்றனர். இந்த செயல், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.
बिहार में पुलिस की चालबाज़ी का खुलासा: CCTV में पकड़ी गई ‘शराब फंसाने’ की साज़िश!
बिहार के मुजफ्फरपुर से पुलिस की शर्मनाक हरकत सामने आई है। मनियारी थाना क्षेत्र के रतनौली निवासी संजीव कुमार को पुलिस ने कथित तौर पर झूठे शराब मामले में फंसाकर जेल भेज दिया। वायरल CCTV फुटेज में… pic.twitter.com/fWI75TNrJ0
— AajTak (@aajtak) July 1, 2025
இக்காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இச்செயல் குறித்து மாநிலத்தின் டிஐஜி திருஹத் சந்தன் குமார் குஷ்வாஹா, முசாபர்பூர் எஸ்எஸ்பி கோட்டா கிரண் குமார், மற்றும் பிராந்திய எஸ்பி ஆகியோரை உடனடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்;
இந்த சம்பவம், காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக சமூகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பொய்யான வழக்கில் சிக்கவைக்க ஒருவரது வாழ்க்கையை அழிக்க போலீசார் இவ்வாறு திட்டமிடுவதை கண்டித்து பொதுமக்கள் கோபமுடன் வலியுறுத்தி வருகின்றனர். நீதிக்காக சஞ்சீவ் குடும்பம் போராடி வருகின்றது.