இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு அதிசயமாக பொன்னிற மாலை வெளிச்சத்தில் பசுமையான புல்வெளிகளால் ஆன பச்சை கம்பளத்தில் யானைகள் கூட்டமாக ஒன்று கூடி நடந்து செல்கின்றன. இந்த இயற்கையான காட்சிகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில் ஒரு யானையை பார்த்தாலே மனிதர்களுக்கு மகிழ்ச்சி தான். தற்போது அந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.