பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே. இவர் மகாராஷ்டிரா தேர்தலை முன்னிட்டு ஜல்னா நகர் என்ற பகுதியில் சிவசேனா மூத்த தலைவர் அர்ஜுன் கோட்கர் என்பவரை சந்தித்தார்.

இவர் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில் பூங்கோத்து கொடுத்து போட்டோ எடுத்தார். அப்போது போட்டோவின் பிரேமுக்குள் கட்சி நிர்வாகி ஒருவர். இதனால் டென்ஷனான முன்னாள் மத்திய அமைச்சர் அவரை கால்களால் எட்டி உதைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.