
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று ஹாவேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசோதியை ஆதரித்து நேற்று காங்கிரஸ் மாநிலத் துணை முதல்வர் டி.கே சிவகுமார் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்.
அப்போது அவர் காரில் இருந்து கீழே இறங்கிய போது தொண்டர்கள் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி அவரை சூழ்ந்து கொண்டனர். அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அலாவுதீன் என்பவர் டி.கே சிவகுமாரின் தோளில் கை வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த சிவகுமார் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Deputy CM of Karnataka DK Shivakumar slaps Congress leader Allauddin Maniar after Allauddin casually put his hand on his party boss DK’s shoulder.
Hard to say who is more arrogant here. #Elections2024 pic.twitter.com/jAdllKrHdi— Abhijit Majumder (@abhijitmajumder) May 5, 2024