
நடிகை தமன்னா பல படங்களிலும் நடித்து பிஸியான ஒரு நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தையே கலக்கி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா கலந்து கொண்டார். அப்பொழுது அவரை பாதுகாவலர்கள் கைகோர்த்தபடி கூட்டத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தார்கள். அப்பொழுது தமன்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு ஓடி வந்து தமன்னாவின் கையைப் பிடித்து குலுக்கினார்.
உடனே அங்கிருந்த பவுன்சர்கள் அவரை அடித்து விரட்ட தமன்னா அவரைவிட சொல்லி கெஞ்சி அந்த இளைஞரை அழைத்து அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு பத்திரமாக செல்லுங்கள் என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையிலும் தமன்னா நடந்து கொண்ட விதத்தை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.
One more reason to admire her even more.. The way she handles the situation.. @tamannaahspeaks ❤ Thangam sir En thalaivi Tammu🥰🥰 pic.twitter.com/wt1rIvY0aJ
— Vinith❤Tammy (@ViniSayz) August 6, 2023