
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு முறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், சம்பந்தப்பட்ட பாடத்தை நடத்தும் ஆசிரியர்களை, அந்த தேர்வு அரை கண்காணிப்பாளராகவும், பறக்கும் படையிலும் நியமிக்க கூடாது. மாணவர்கள், தனித் தேர்வர்கள், ஆசிரியர்கள் உட்பட எவரும் மொபைல் போன், தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.