அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவுகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெறும் பாராட்டு விழாக்களை புறக்கணிக்கும் செங்கோட்டையன் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்க்கிறார்.

சமீபத்தில் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற நிலையில் அதற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் இருமுறை டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமகத்ஷாவை நேரில் சந்தித்தார். எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க மறுப்பு தெரிவிப்பதால் செங்கோட்டையன் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் தற்போது செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி அவர்களின் படங்கள் இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இல்லை. மேலும் இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல்கள் தலை தூக்குகிறதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.