
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுகுமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44) மற்றும் துர்க்கைராஜ் (45). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ராணி சித்ரா (40). இவர் சுகுமாரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.
இந்நிலையில் சுகுமாரிடம் பணம் நிறைய இருந்ததால் ராணி அதனை அபகரிக்க முடிவு செய்த அடிக்கடி அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர்கள் உல்லாசமாக இருந்ததை துர்க்கை ராஜ் மற்றும் நாராயணசாமி ஆகியோர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அவர்கள் அந்த வீடியோவை சுகுமாரிடம் காட்டி 10 லட்ச ரூபாய் பணம் தராவிடில் இதனை உன் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி கிடைத்த சுகுமார் உடனடியாக பழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நாராயணசாமி, துர்க்கை ராஜ் மற்றும் ராணி சித்ரா ஆகியோர் கூட்டாக சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.