கோவையில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் பேசிய நாஞ்சில் சம்பத், இச்சை வந்தால் தாய் மகனுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் கூறியுள்ளார். அப்போதே தான் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என்று நான் பதிவிட்டிருந்தேன். தந்தை பெரியாரை இழிவாக பேசக்கூடிய சீமானை ஏன் திராவிட மாடல் அரசு இன்னும் கைது செய்யாமல் உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பைத்தியங்களை கைது செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று பதில் அளித்திருந்தேன்.

இப்படிப்பட்ட பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலை திட்டம் வைத்துள்ளது. வேலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கார நபர் தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டு கொடுத்த இரண்டு பாவிகள், கோவை ராமகிருஷ்ணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப்புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான் தன்னையே விற்பனை செய்யக் கூடியவர் தான். இப்படிபட்டவர் பல மேடைகளில் தமிழா, நீ உன்னை வெறுக்காதே என்று பேசுவார் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.