
புதிய பைக் களுக்கான வாழ்நாள் வரி ஒரு லட்சத்திற்கும் கீழ் அதன் விலையில் 10 சதவீதம், ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவற்றுக்கு 10%, இரண்டு முதல் பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் பைக்குகளுக்கு ஆறு முதல் 9.25 சதவீதம் வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.