கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கொஞ்சைக்கொப்பா என்ற கிராமத்தில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 22 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளார். உடனே இளம்பெண்ணும் அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற அந்த நபர் மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு அருகே நிறுத்தி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார்.

இதனை எதிர்பார்க்காத அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர். உடனே வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் இளம்பெண் உடனடியாக போலீஸ் செய்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.