
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். இந்நிலையில் அந்த பேருந்து புறப்பட்டு மூன்றடைப்பு வந்து கொண்டிருக்கும்போது பேருந்தில் இருந்த ஒரு பெண்ணிடம் இருக்கையில் இருந்த வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார்.
அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை பொன்னாகுடி பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய பெயர் மாரிக்கனி(32) என தெரிய வந்தது. அதோடு அவர் விருதுநகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.