
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி பா. சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற ஒரு நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் பொதுமக்களின் சொத்துக்களை பிரித்து ஊடுருவல் காரர்களுக்கு பகிர்ந்து கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னதாக கூறுகிறார்கள். நாங்கள் எந்த பக்கத்தில் அப்படி கூறினோம்.
இந்த கருத்தை எந்த பக்கத்தில் படித்தார் என்று ராஜ்நாத் சிங்கை நான் கேட்க விரும்புகிறேன். அவர் ஒருவேளை கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணங்களை படித்தாரா. ராணுவ மந்திரியாக இருந்து கொண்டு இப்படி அப்பட்டமாக பொய் பேசுவது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் தேவையில்லாமல் பொய் பேசி இராணுவ மந்திரி தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.
I am disappointed that a sober politician like Mr Rajnath Singh should speak falsehoods
Economic Times has reported his speech where he had said that it was mentioned in the Congress’ Manifesto that
‘Congress would grab assets of the people and redistribute them to infiltrators’…— P. Chidambaram (@PChidambaram_IN) April 24, 2024