
பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.