கர்நாடக மாநிலத்தில் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்த நிலையில் தன்னுடைய வீட்டை விவிற்று கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருடைய வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கொடூர கனவு வந்ததாம். அதில் அவருடைய மகள்களை கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசினால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டதாம்.

இதனால் அவர் தான் பெற்ற மகள்களான அஞ்சலி (8) மற்றும் அனன்யா (4) ஆகிய இரு குழந்தைகளையும் வேறொரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் அவர்களின் கழுத்தை அறுத்து ரத்தத்தை லிங்கத்தில் பூசியுள்ளார். இது தொடர்பாக அணியின் மனைவி ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அனிலை கைது செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அதன்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.