
கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் நபாட்டியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் நபார்ட்டியில் உயிருள்ள புழுக்கள் நெளிவதாக குற்றம் சாட்டி வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில் பேசிய பெண் இந்த நபாடியில் காலாவதியாகும் தேதி ஜூலை மாதம் மூன்றாம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. ஆனாலும் நபாட்டியில் உயிருடன் புழுக்கள் நெளிகிறது. எனவே பெற்றோர் யாரும் தங்களது குழந்தைகளுக்கு நபாட்டியை வாங்கி கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.