ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.

​​எல்லோரும் உள்ளே சென்று விட்டார்கள் என்று நினைத்து பிரதீப், கார் கதவைப் பூட்டிவிட்டார். 2 மணி நேரமாகியும் இளைய மகள் கோர்விகாவை காணாததால் காரில் சென்று பார்த்தபோது குழந்தை பரிதாபமாக இறந்து கிடந்தது தெரியவந்தது.