
2002 ஆம் ஆண்டு அறிமுகமான பிரபல கே-பாப் பாடகர் வீசுங் நாட்டில் தனது ஆத்மார்த்தமான நிகழ்ச்சிகளுக்கு பிரபலமானவர். 2022 ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து தனது வாழ்க்கையில் பெரும் சரிவை சந்தித்தார். இந்நிலையில் இவர் இவர் தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது . ஆனால் அவர் எதற்காக உயிரிழந்தார் என்ற தகவல் இன்னும் காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. போதைப் பொருள் உட்கொண்டதால் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.