தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் திருமணம் ஆகி பக்கத்துக்கு ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உடலில் ஆடையின்றி மாட்டு சாணம் கொட்டும் குழியில் முகம் புதைந்து இறந்து கிடந்தார்.

இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீஸ் திப்பணம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ராமர் (72) என்பவரை பிடித்து விசாரித்ததில் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது மூதாட்டி மறுத்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.