
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே கோவில் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக வைக்கப்பட்டிருந்த சாரத்தின் மீதும் அந்த நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் கோவிலில் தீ வைத்த கடையம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். அவர் எதற்காக தீ வைத்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.