
உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியனாக அறியப்பட்ட ஹங்கேரியை சேர்ந்த ஆக்னஸ் கெலெட்டி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு 103 வயது ஆகிறது. ஜிம்னாஸ்டிக்கில் 5 தங்கம் உள்ளிட்ட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
வருகிற 9-ஆம் தேதி ஆக்னஸ் தனது 104-வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். அதற்குள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.