
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.