பிரபல நடிகரான ராகேஷ் பூஜாரி காந்தாரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். காந்தாரா 2 திரைப்படத்திலும் ராகேஷ் நடித்து வந்தார். நேற்று திருமண மெஹந்தி விழாவில் பங்கேற்று நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென சரிந்து விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ராகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக ராகேஷ் இருந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரது இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.