
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டீ மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது டீ மற்றும் காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. அதன்படி 150 மில்லி கிராம் காபியில் 80 முதல் 120 மிகி காஃபினும், இன்ஸ்டன்ட் காபியில் 50 முதல் 65 மில்லி கிராம் காஃபினும், டீயில் 30 முதல் 65 மில்லி கிராம் காஃபினும் உள்ளது.
ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ளக்கூடாது என்பதால், டீ மற்றும் காபி குடிப்பதன் மூலம் உடலுக்கு செல்லக்கூடிய இரும்பு சத்துக்கள் தடைபடக்கூடும். அதே சமயத்தில் பால் இல்லாமல் தேநீர் அருந்துவதால் ரத்த ஓட்டம் சீராவதோடு வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. எனவே தேநீர் மற்றும் காபி போன்றவற்றை குடிப்பதை கட்டுப்படுத்தி அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்ற சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். மேலும் அதே நேரத்தில் உப்பு மற்றும் எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளை குறைவான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.