
மும்பையில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் அணியின் நடுவர் பிரசாத் மல்கர் ஓங்கா திடீரென மைதானத்தில் வைத்தே மயங்கி விழுந்த உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் 19 வயதுக்கு உட்பட்ட பாமா கோப்பை போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் KRP X1 CC மற்றும் cresent CC அணிகள் மோதிய மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது 11-வது ஓவரின் போது திடீரென நடுவர் பிரசாத் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். மேலும் கிரிக்கெட் போட்டியின் போது நடுவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.