
தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் திடீரென மாணவி ஒருவர் பயந்து போய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாணவி கயல்விழி நீட் தேர்வுக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வினால் கடந்த 2 மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வின் பயத்தினால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.