பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின்  நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா என்பவரிடம் பழகி வந்துள்ளார். இதில் பிரியங்கா போலீசாக இருக்கிறார்.

இந்நிலையில் பிரியங்கா கடந்த சில மாதங்களாக பாஸ்கரிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பிரியங்கா நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்துள்ளனர்.