தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி தற்போது படங்கள் இயக்குவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில், நீங்கள் யாரையாவது பார்த்து பொறாமை பட்டிருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த், நடிகர் தனுஷை பார்த்து நான் பொறாமை பட்டுள்ளேன். நாங்கள் ஒருமுறை ஒன்றாக பணியாற்றிய போது டான்ஸ் மாஸ்டர் இல்லாத நிலையில் தனுஷ் தான் லேடி ஆர்டிஸ்ட்டுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஒரே மாதிரி கொஞ்சம் கூட மாறாமல் ஐந்து முறை நடனம் ஆடினார். அவருக்கு இருக்கும் திறமையை அப்போதுதான் நான் நேரில் பார்த்தேன். அவர் பெண்ணாக இருந்திருந்தால் நான் காதலித்திருப்பேன் என ஸ்ரீகாந்த் பேட்டி அளித்துள்ளார்