தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த ஞானசேகரன் என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி  வரும் நிலையில் காவல்துறையும் அரசாங்கமும் ஞானசேகரன் ஒருவன் மட்டும்தான் குற்றவாளி என்று கூறி வருகிறார்கள்.

மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் அப்படி பேசியதாக கூறியுள்ளனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டதாகவும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பெண்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பெப்பர் ஸ்ப்ரே மற்றும் எஸ்ஓஈஸ் உபகரணங்களை வழங்கினார். மேலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு இது மட்டும்தான் ஒரே வழி என்று கூறி அந்த பொருளை வழங்கியுள்ளனர்.