
இந்தியாவில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக தடம் பதித்து வருகிறார்கள். அவர்களுடைய நலனுக்காக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒன்றிய அரசு லக்பதி திதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மூன்று கோடி பெண்களை செல்வந்தர்களாக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. மகளிருக்கான நிதி உதவியை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் வட்டி இல்லா கடன் வழங்கப்படுகின்றது.
பெண்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் மூலம் தகுதி வாய்ந்தவர்கள் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொள்ளலாம். சுயதொழில் தொடங்கிய தொழில் முனைவோர்களாக விரும்பும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறலாம். இதன் மூலம் தங்களின் பொருளாதார நிலையையும் மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற பெண்கள் சுய உதவி குழுவில் இணைந்திருக்க வேண்டும். தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்கள் தேவையான ஆவணங்களுடன் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கடன் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று வட்டி எதுவும் இல்லாமல் அசல் தொகையை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவராகவும் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாகவும் இருப்பது அவசியம். மேலும் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். அது மட்டுமல்லாமல் தொழில் தொடங்குவதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.