
ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப் YouGov உடன் இணைந்து சமீபத்தில் மேட்ச் மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் 78% பெண்கள் போலியான ப்ரொபைல்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து 82% பெண்கள் சம்பந்தப்பட்ட செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்கள் அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். சுமார் 48 சதவீதம் பேர் இதுபோன்ற செயலிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தங்களது சுய விவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும் என 74% பேர் கூறுகின்றனர்.