
தானேவை சேர்ந்த ஒரு வாலிபர் பெண்களிடம் அந்தரங்க உறுப்பை காட்டி மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டு இருந்த பெண்களின் ஆடைகளை வைத்து சுய இன்பம் செய்துள்ளார். அந்த வாலிபருக்கு 20 வயது ஆகிறது. அவர் குடியிருப்பு வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் இதை வெட்கக்கேடாக கருதி பெண்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நாட்கள் போகப்போக அந்த வாலிபரின் தொந்தரவு தாங்க முடியாமல் குடும்பத்தாரிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர்.