
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செயலியில் இனம், வயது மற்றும் பாலினம் பற்றிய அனைத்து விவரங்களுடன் உள்நுழைய வேண்டும். வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசிக்கான ஆதாரத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு விண்ணப்பதாரர்கள் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.