
பொதுவாக சமையலிடம் பெறும் பூண்டு ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த பூண்டு பொதுவாக அனைத்து வகை குழம்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு பல நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையும் வாய்ந்தது. இந்நிலையில் பூண்டு காய்கறியா அல்லது மசாலா பொருளா என்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள வேளாண்மை துறை மற்றும் விவசாயிகள் அமைப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்கள் அம் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு பூண்டை ஒரு காய்கறியாக வகைப்படுத்தி உத்தரவிட்டது. ஆனால் இதனை வேளாண்மை வணிக அமைப்பினர் ஏற்கவில்லை.
இதனால் அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் பூண்டை ஒரு காய்கறியாக அறிவித்து உத்தரவிட்டனர். அதோடு இந்த தீர்ப்பையும் அவர்கள் முடித்து வைத்ததோடு பூண்டை மசாலா பொருளாகவும் காய்கறிகளாகவும் விற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும் இந்த தீர்ப்பு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் என இருவருக்குமே நன்மை அளிக்கும் என நம்பப்படும் நிலையில் இந்த விவகாரத்தை இதோடு விடுவார்களா அல்லது உச்சநீதிமன்றம் வரை எடுத்து செல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்