தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற மனைவியும் அபினேஷ், தர்ஷன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவன் வீட்டில் இருந்து இரண்டு நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் அந்த மூன்று பேரின் பிணத்திற்கு பக்கத்தில் சிவன் மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் பிணத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.