
அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அதன்பிறகு மறுநாளே அவர் ஜாமினில் வெளிய வந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பெண் ரேவதியின் மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.