
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கண்ணன் மதுபோதையில் நிதானமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நோயாளியுடன் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இதுகுறித்து நோயாளிகள் புகார் அளித்ததும் வேறு ஒரு மருத்துவர் வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் ஜெயமணி கூறியதாவது, மருத்துவர் கண்ணன் குறித்து மருத்துவர் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மருத்துவ கல்வியக இயக்குனர் போதையில் பணியில் ஈடுபட்ட கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.