தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதல் மாநாட்டின் போது விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய நிலையில் அரசியல் எதிரி மற்றும் கட்சி தொடங்கியதற்கான காரணங்கள் கொள்கை தலைவர்கள் என அறிவித்தார். திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று தாக்கி பேசிய விஜய் பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அதன் பிறகு முதல் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த இடத்தில் நடப்பட்ட 100 அடி நிரந்தர கொடி கம்பத்தில் விஜய் கட்சிக்கொடியை ஏற்றினார்.

இந்நிலையில் புயல் காரணமாக சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிகளும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தமிழக வெற்றி கழகத்தின் கொடி கம்பத்தில் உள்ள கொடி சரியாக இல்லை. அது சரிந்து கிடந்த நிலையில் காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் இறங்கி சென்று அந்த கொடியை சரி செய்தார். அவருடன் உதவிக்கு ஒருவரும் வந்தார். இருவரும் மழையை கூட பொருட்படுத்தாமல் அந்த கொடி கம்பத்தை சரி செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் நடிகர் விஜயின் ரசிகர்கள் அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.