நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் புத்தாண்டு சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது விலை உயர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் சமீபத்தில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டண உயர்வை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். நிறுவனத்தின் ஏ ஆர் பி டபிள்யூ இலக்கு ரூபாய் 300 ஆகும். பயனர்களிடமிருந்து நிறுவனத்திற்கு வரும் வருவாய் விகிதம் தான் ஏ ஆர் பி டபிள்யூ என்பதாகும். இதனால் இதனை ஒரே கட்ட நடவடிக்கையாக செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.