இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஒரு வாடிக்கையாளர் கடந்த மாதம் ஓலா ஷோரூமில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். ஒரு மாதத்திலேயே சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அதை பழுது பார்க்க கூறியுள்ளார். அப்போது ஓலா நிறுவனம் 90 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டது. இதனால் கோபமடைந்த அந்த நபர் குட்டியானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூம் வந்தார்.

அதன் பிறகு தான் கொண்டு வந்த சுத்தியலால் ஆத்திரம் தீர எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தங்களுக்கு வந்த 10,644 புகார்களில் 99.1 சதவீதம் தீர்க்கப்பட்டதாக தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் கூறியிருந்தது. இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.