
தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகர்ந்து சென்றதை தொடர்ந்து மழை படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. மழை இல்லாத காரணத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள இன்று பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.