
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலின் அன்னதான கூடத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார். இது திருச்சி சேலம் ரவுண்டானா சாலை அருகே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படுகிறது. சுமார் 20 கோடி நிதி மதிப்பீட்டில் இது கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை பணிகளை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அவருடன் மகன் மிதுனும் கலந்து கொண்டார். அதிமுகவின் ஐடிவிங்கை மிதுன் கவனித்துக் கொள்வதாக கூறப்படும் நிலையில் இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் மிதுன் தனியாகவோ அல்லது தன் தந்தை எடப்பாடி பழனிசாமியுடனோ சேர்ந்து கலந்து கொண்டது கிடையாது.
ஆனால் முதல்முறையாக மிதுன் இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டுள்ளார். தேர்தல் சமயத்தில் மட்டும் தான் அவர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியில் தந்தை மற்றும் தன் குடும்பத்துடன் வாக்களிப்பதற்கு மட்டுமே வருவார். இப்படி இருக்கையில் இன்று முதன்முதலாக தந்தையுடன் பொது நிகழ்ச்சியில் மிதுன் கலந்து கொண்டுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது போன்று அவருடைய மகனுக்கும் எல்லாம் செய்யப்பட்டது. அவர் முதன்முதலாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.