தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பலரும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து அரசின் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ள நிலையில் 2.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை விண்ணப்பித்த அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.