தமிழகத்தில் பொதுவாக மின் மீட்டரில் எச்.எச்.சி என்ற கையடக்க கணினி மூலமாக மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் விரைவில் செல்போன் செயலி மூலமாக மின் கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வர இருப்பதாக தற்போது தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதற்காக மின்சார வாரியம் புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்த புதிய செயலி தற்போது சோதனையில் இருப்பதால் சோதனை முடிவடைந்த பிறகு அமலுக்கு வரும். மேலும் தமிழகத்தில் மின் கணக்கீட்டில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும் உடனடியாக கரண்ட் பில் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.