
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் பழைய கொடி மரத்தைப் போன்றே புதிய கொடிமரமும் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. புதிய கொடிமரத்தில் வளையம் போன்றவற்றை வைப்பதற்கு தான் எங்கள் எதிர்ப்பு என தெரிவித்துள்ளனர்.
இதனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தீட்சிதர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பினர் இடையே பேசி வருகின்றனர்.