காரைக்கால் சிறந்த ஒரு பெண்ணும் வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் வாலிபர் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார். அந்த பெண் வாலிபரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வாலிபரை அழைத்து விசாரித்துள்ளார். பின்னர் இளம் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தாலி கட்டிய பிறகு அந்த வாலிபர் தனது காதலியை திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.