மத்திய பிரதேஷ் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்தவர்கள் அமீர் – பம்மி தம்பதி. இந்த தம்பதிக்கு நான்கு மாதத்தில் ஒரு பெண் ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் இருந்தனர். இரட்டைக் குழந்தைகள் என்பதால் குழந்தைகளை கவனிப்பதில் பம்மி அமீரின் உதவியை கேட்டுள்ளார். ஆனால் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

இதனால் மிகுந்த கோபத்திற்கும் வருத்தத்திற்கும் உள்ளான பம்மி இரண்டு குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தண்ணீர் நிறைந்த தொட்டி ஒன்றில் ஒரு குழந்தையை முதலில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் இரண்டாவது குழந்தையையும் அதேபோன்று கொலை செய்தார்.

சிறிது நேரத்தில் அமீர் வீட்டிற்கு வந்து குழந்தையை தேடிய போது குழந்தையை காணவில்லை என பம்மி நாடகம் ஆடியுள்ளார். அமீர் மற்றும் அவரது நண்பர் குழந்தையை தேடிய போது தண்ணீர் தொட்டியில் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியாததால் அந்த தம்பதி குழந்தைகளை அடக்கம் செய்துவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அமீர் மற்றும் பம்மியை கைது செய்துள்ளனர்.