மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிப்பெட் டிப்ளமோ முடித்தவர்கள் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பி டெக் வகுப்புகளில் நேரடியாக சேர முடியும். டிப்ளமோ சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு https://cipet24.onlineregistrationform.org/CIPET/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும். மேலும் விபரங்களுக்கு 96002 54350, 99418 44937, 93450 22712 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cipet.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.