நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, இவர்கள் சாதிவாரி கணக்கெடுக்க மாட்டார்கள். அந்த உரிமை ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. அவர்கள் தான் எடுக்க வேண்டும் என கூறுவார்கள். இவர்கள்தான் மாநில தன்னாட்சி, மாநில உரிமை என்று முழங்கியவர்கள். வீட்டுக்கு வீடு ஓட்டு எவ்வளவு என எண்ணி ஓட்டுக்கு நோட்டு கொடுத்த உங்களால் சாதிவாரி கணக்கு எடுக்க முடியாதா? அந்த தொகுதியில் ஓட்டு எவ்வளவு இருக்குன்னு தெரியாதா? அவர்தான் நம்பர் ஒன் முதலமைச்சர்.

அந்த ஆட்சியில் குறையே இருக்காது என விளம்பரப்படுத்தி வருகின்றனர். எந்த தகுதியும் இல்லாத இந்த நிலத்தில் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அதில் நம்பர் ஒன் இவர்தான். ஒரு வீரனை எதிர்க்க அருவா, கம்பை தூக்கிட்டு வருவாங்க. ஆனா இவங்க அவதூற தூக்கிட்டு வராங்க. ராமசாமி அவர்கள் சமூகநீதி பெற்று கொடுத்திருந்தால் நாங்க ஏன் முச்சந்தியில் இருந்து மூச்சு முட்ட கத்திக்கிட்டு இருக்கோம்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து போல் பெரியாரை சொல்கிறார்கள். அண்ணாவை பெரியார் படிக்க வைத்தாரா? அம்பேத்கரை பெரியார் படிக்க வைத்தாரா? இரண்டு பெரிய பதவிகள் ஒன்று முதலமைச்சர். மற்றொன்று துணை முதலமைச்சர். அப்பனுக்கு மகனாக பிறந்ததால் பிறப்பால் மட்டுமே பதவி பெறுகின்றனர். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதி துணை முதலமைச்சர். கருணாநிதி மகன் முதலமைச்சர் என்று சீமான் கடுமையாக விமர்சித்தார்.