
கடந்த சனிக்கிழமையன்று புதுதில்லி ரயில் நிலையத்தில் மகா கும்ப மேளாவிற்கு புனித நீராட செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து அன்று இரவு, திடீரென கும்பமேளா நோக்கி செல்லவிருந்த ஒரு ரயிலின் தளமாற்ற அறிவிப்பானது வெளியிடப்பட்டது. இதனால், பயணிகள் அதிகமான பீதி அடைந்து பதற்றத்துடன் விரைந்து ஓடியுள்ளர்கள்.
இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக நெரிசல் ஏற்பட்டது. இரவு 9:00 மணியளவில், இந்த கூட்ட நெரிசலானது ஒரு பெரிய தள்ளுமுள்ளு சம்பவமாக மாற, 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த பரிதாபமான சம்பவத்திற்குப் பிறகு, ரயில் நிலையத்தில் பாதுகாப்பு கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஒரு பெண் RPF காவலர் தனது கடமையையும் தாய்மையையும் சமநிலைப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதாவது RPF காவலர் ரீனா, தனது பிறந்த குழந்தையை மார்பில் கட்டிக்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருசிலரே அவரது அர்ப்பணிப்பிற்குப் பாராட்டு தெரிவித்தனர். இன்னும் ஒருசிலரே ஒரு அபாயகரமான சூழலில் குழந்தையுடன் இருப்பது தவறு எனவும் விமர்சித்தனர்.